இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகின்றன. ஓடுமீன் ஓட உருமின் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்று அவ்வையார் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பவர்களை குறைத்து எடை போடக்கூடாது என கொக்கின் தன்மையை ஒப்பிட்டு இருப்பார். அதாவது கொக்கு மீனை பிடிப்பதற்காக காத்திருக்கும் போது ஒற்றை காலில் பேசாமல் நின்று கொண்டிருக்கும்.

அப்போது சின்ன சின்ன மீன்கள் அதைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும். சுற்றிவரும் மீன்களில் எது பெரியது என தேர்ந்தெடுக்கும் வரை கொக்கு பேசாமல் நின்றிருக்கும். பெரிய மீன் அருகே வந்ததும் சற்றும் தாமதிக்காமல் பாய்ந்து கொத்தி எடுத்து சாப்பிடும். இதனை கண்கூடாக காட்டும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sam Rino இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samrinophotography)