
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் தற்போது வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தற்போது ஒரு நாள் போட்டியில் அவரை பிசிசிஐ சேர்த்துள்ளது.
இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடினால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் முறையாக ஒரு நாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.