முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏக்களின் மாத ஓய்வூதியம் 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதேபோல குடும்ப ஓய்வூதியம் 15,000 ரூபாயிலிருந்து 17,500 ரூபாயாக உயர்த்தப்படும். மருத்துவ படி 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக கூறியுள்ளார். இந்த மாதம் முதல் ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வரும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.