
பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று 17-வது சையத் முஷ்டாக் அலி டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்யாசத்தில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். இதன் மூலம் ஒரே வருடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 4 கோப்பைகளை வென்ற கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதாவது முன்னதாக ரஞ்சி கோபையில் மும்பை அணி கோப்பையை வென்றது. இதேபோன்று 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் கோப்பையை வென்று கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இராணி கோப்பையிலும் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை தட்டி தூக்கியது. மேலும் இதைத் தொடர்ந்து தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் வென்றுள்ளார். இதன் மூலம் ஒரே வருடத்தில் 4 கோப்பைகளை வென்ற கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.