தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு நல்ல செய்தியை வெளியிடுவதாக நேற்று தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியதாக முதல்வர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்திலிருந்து அறிமுகமானது நிரபனம் ஆகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது தான் தமிழினத்திற்கு மீண்டும் ஒரு பெருமை. இரும்பு காலம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கியதை நிரூபணம் ஆகிவிட்டதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ் நிலத்திலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகிவிட்டது. கிமு 3345 ஆண்டிலேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இது தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ் நிலத்திற்கும் மற்றொரு பெருமை. தமிழ், தமிழ் நிலம் மற்றும் தமிழ்நாடு என்று இதுவரை சொல்லி வந்தது இலக்கியத்தில் உள்ளதோ அல்லது அரசியலுக்காகவோ அல்ல. மேலும் அனைத்துமே வரலாற்று உண்மை என்று கூறியுள்ளார்.