
இந்த தீபாவளி பரிசாக, ஆந்திர மாநில அரசு மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழை பெண்களுக்கு இது தொடர்பான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தற்போது, இந்த திட்டம் அக்டோபர் 31, தீபாவளி அன்று செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதொறும் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், பயனாளிகள் 4 மாதங்களில் 1 முறை இலவச சிலிண்டர் பெறலாம். இதில், பயனாளிகள் பணம் செலுத்திய பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் அவர்களின் கணக்குக்கு மீண்டும் அந்த தொகை திரும்ப சேர்க்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் மக்களின் வாழ்வியல் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மலிவான விலையில் அடிக்கடி கேஸ் எடுக்க முடியாத ஏழை மக்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும். இதேவேளை, தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு மேலும் சந்தோஷத்தை அளிக்கும் வாய்ப்பு ஏற்படும்.