
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சந்திரசேகர் பெம்மசானி பதில் வழங்கினார்.
இது பற்றி அவர் கூறியதாவது, நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் அசாம் ஆகிய 18 மாநிலங்களில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் சுமார் 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகா, பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 45.56 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.