சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு பேசிய அவர் சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக கண்டுபிடிக்க உதவும் வழிவகையை கண்டுபிடிக்கும் அமைப்பாளர் அது தனி நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ஆகும். அதன் பிறகு கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்றார். மேலும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.