
பிரபல நடிகர் பகத் பாஸில். இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.
இந்தப் படம் கடந்த மே மாதம் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது தமிழ் ஓடிடி தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் பிரைம் தளத்தில் வருகின்ற 21ஆம் தேதி ஆவேசம் தமிழில் வெளியாகிறது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.