
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் பிரியா வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில் கடந்த 10-ம் தேதி படம் வெளியானது.
இந்த படம் ரிலீஸ் ஆகி தற்போது ஐந்து நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் இந்த படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.