தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து இந்தியாவில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக மாறியுள்ளது. இந்த படத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய 22 வது திரைப்படத்தில் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இது இயக்குனர் அட்லியின் 6-வது திரைப்படம் ஆகும். தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

 

அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. நடிகர் அட்லீ இயக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுடன் அவர் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.இது  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.