
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக முடிந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் நிலையில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மைக்மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் முதல் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கோட் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.