
சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால் சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார் அந்த சிறுமி. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் பாட்டி. அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த சிறுமி ஆறு மாத காலமாக தொடர்ந்து மூன்று பேரால் பாலிய வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன் பாட்டி காவல்நிலையத்தில் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமையை பெரியப்பா மகனான அண்ணன் முறை சிறுவன், அவருடைய நண்பனான மற்றொரு சிறுவன், தையல் கடை முதியவர் என மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை யடுத்து மூன்று பேரும் போகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்த தாய் தந்தையிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.