நடிகர் விஜய் சேதுபதி 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் படாத பாடுபட்டு அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார். கடைசியாக மகாராஜா படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.  இந்நிலையில் சினிமாவில் பல வருடங்கள் போராடிய இவருக்கு முதல் வெற்றியை கூட தாக்கு பிடிக்க முடியவில்லை என்று வலைப்பேச்சு அண்ணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது முதல் படத்தின் வெற்றியின் போது பிரபல ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மீடியாக்கள் இருப்பார்கள் என்று தெரிந்தும் விஜய் சேதுபதி அதிக அளவு மதுபோதையில் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் ஓனரிடம்  வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். ஹோட்டல் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு அந்த இடத்திற்கு பிரியாணி கொண்டு வர வேண்டும் என்று டார்ச்சர் செய்தாராம் .இவ்வளவுதான் விஜய் சேதுபதியின் கேமராவுக்கு பின்னால் இருக்கும் தன்னடக்கம்” என்று கூறியுள்ளார்.