
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்து 1500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இதில் புஷ்பா முதல் பாகத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில் அல்லு அர்ஜுனை காண வந்த ரசிகை சந்தியா என்பவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவரிடம் நேற்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் பற்றி தெலுங்கானா முதல்வர் சட்டசபையில் பேசிய போது ரேவதி உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது அந்த மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் சீத்தக்கா புஷ்பா படம் ஒரு போலீஸ்காரர்களை நிர்வாணமாக்கிய கடத்தல்காரர்களை மையப்படுத்திய திரைப்படம். ஒரு கடத்தல் காரனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் சமூக பிரச்சனைகளை பேசிய திரைப்படம். அந்த படத்துக்கு தேசிய விருது வழங்காமல் ஒரு கடத்தல்காரர் பற்றிய படத்திற்கு தேசிய விருது வழங்கியுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.