கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் காலமான ஒரு பெண்ணின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது அந்த குளிர்சாதன பெட்டிக்கான ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும்போது உயிரிழந்த பெண்ணின் மருமகள் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டால் பிரீசர் பாக்ஸ் ஜெனரேட்டரில் இணைத்து அதற்கு பெட்ரோல் ஊற்றும்போது அருகில் இருந்த விளக்கில் பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் பத்மாவதி(53) என்பவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிர் இழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பத்மாவதி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.