சென்னை மாவட்டம் திருமுல்லைவாயில் கமலம் நகர் மூன்றாவது தெருவில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தனலட்சுமி பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் விநாயகம் தனது மனைவியிடம் இரவு உணவு கேட்டுள்ளார். ஆனால் தனலட்சுமி தாமதமாக உணவு சமைத்துக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த விநாயகம் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த விநாயகத்தின் மகன் தனது தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.