
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு சிறுமிகளை அண்ணன் தம்பிகளான கருப்புசாமி(41), ரங்கநாதன்(26) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கருப்பு சாமியையும், ரங்க நாதனையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றம் கருப்புசாமி, ரங்கநாதன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.