ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரனவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆரனவள்ளி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆரனவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்