
பெங்களூருவில் 40 வயதான ப்ரசாந்த் நாயர் என்ற தொழில்நுட்ப விற்பனை மேலாளர் அவரது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். லெனோவோ நிறுவனத்தில் மூத்த விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றி வந்த அவர், சிக்கபணவரா பகுதியில் தனது மனைவி பூஜா நாயர் மற்றும் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.
பூஜா டெல்லில் பணிபுரிந்து வருகிறார். தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவதால், விவாகரத்து குறித்து ஆலோசனை நடந்ததாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் ஒன்றாகவே வாழ பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, ப்ரசாந்த் நாயரை அவரது தந்தை செல்போன் மூலம் பலமுறை அழைத்தும் பதில் இல்லை. இதனால் அவரது தந்தை வீட்டுக்கு சென்றபோது பிரசாந்த் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்தில் எந்தவொரு மரணக் குறிப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து சோலதேவனஹள்ளி போலீசார் அசாதாரண மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.