கரூர் மாவட்டம் ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் மகன் இறந்த சோகத்தில் சந்திரசேகர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.

பதிலுக்கு சரண்யா மூங்கில் கட்டையால் தனது கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் மயங்கி கிடந்தார். பின்னர் சரண்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்திர சேகரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சந்திரசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரண்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.