தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மகளில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கலாம் என்று கூறி ஒரு விண்ணப்ப படிவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. இதனைத் தொடர்ந்து இது போன்ற எந்த விண்ணப்பத்தையும் அரசு சார்பில் வெளியிடவில்லை எனவும் இந்த செய்தி போலியானது, எனவே இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.