மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வு பெற்றன.

இந்நிலையில் இன்று நடந்த சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேடிங் செய்த இந்திய அணி 14.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.