சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் தன்னுடைய எக்ஸ் பக்கத்தை கையாளுவார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி  தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை இன்று கையாளும் நிலையில் இது பற்றி அவர் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அந்த பதிவில், வணக்கம் நான் வைஷாலி. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் வலைதள பக்கத்தை கையாள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் செஸ் விளையாடுகிறேன் என்பது உங்களில் பலருக்கும் தெரியும். மேலும் இன்னும் பல போட்டிகளில் நம்முடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.