
உலக மகளிர் தினமானது இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மகளிருக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் மகளிர் தின டூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இன்று மகளிர்க்காக ஸ்பெஷல் டூர் ஒன்றை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த டூர் ஒரு நாளில் முடிவடையும்.
இந்த ட்ரிப்பில் சென்னை மகாபலிபுரம், முதலியார் குப்பம் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்படும். இதற்கு இடையே பெண்களுக்கான சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மகளிர்க்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை வேளையில் தேநீர் வழங்கப்படும். பஸ் சார்ஜ் பயண செலவு என மொத்தம் சேர்த்து பெண்கள் ரூ.3,150 வழங்க வேண்டும்.