
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக இடம் ஒன்றை ஒதுக்கி கொடுத்துள்ளார். இதையறிந்த சுரேஷ் கடந்த 20-ம் தேதி கண்ணையாவுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த கண்ணையா மற்றும் இளைய மகன் ரமேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுரேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதன் பின் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கண்ணையா மற்றும் ரமேஷை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.