
சன் டிவியில் செவ்வந்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை திவ்யா. இவர் அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அவருக்காக இஸ்லாமிய மதம் மாறி திவ்யா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திவ்யா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பல பிரச்சனைகள் இருந்தன.
தற்போது திவ்யாவுக்கு அழகிய பெண் குழந்தை உள்ள நிலையில் தனது குழந்தையுடன் திவ்யா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மூத்த மகளுடன் ஆட்டம் போடும் திவ்யாவின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் போது யார் அந்த குழந்தை என தெரியாத அளவு குழந்தையுடன் குழந்தையாக மாறி திவ்யா உற்சாகப்படுத்தியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க