வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் என்னுடைய மருமகன் என் மகளை வீட்டில் விட்டுவிட்டு என் மனைவியை அழைத்து சென்றுவிட்டார்.

அவர் ஈரோட்டில் என் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். என் மனைவியை நான் என்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தேன். அவர் வர மறுத்துவிட்டார். என் மருமகனிடம் கூறினால் அவர் அனுப்ப மறுக்கிறார். அதோடு என்னுடைய கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதற்கு என் மருமகனின் பெற்றோரும் உடந்தை. மேலும் என் மருமகனிடமிருந்து என்னுடைய மனைவியை மீட்டு தாருங்கள் என்று கூறியுள்ளார்.