
திருப்பூர் மாவட்டத்தில் விஷால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷால் அவரது நண்பர்களுடன் திருப்பூருக்கு காரில் சென்றுள்ளார். இந்த கார் கணியூர் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விஷால் மற்றும் பூபேஷ் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகயிரிழந்தனர். அதன்பிறகு பலத்த காயத்துடன் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.