
மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சென்னை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நேற்று சென்னை நோக்கி வந்த விருதுநகரை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, விழுப்புரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த ஜெயபால் மூர்த்தி குடும்பத்திற்கு சோகமாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.10 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் அறிவித்துள்ளார்.