தெலுங்கானா மாநிலம் மணிப்பூரில் தற்போது வன்முறை சூழல் நிலவி வருவதால் மக்கள் பலரும் அதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாக தெலுங்கானா அரசு வடகிழக்கு மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்காக 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு முழு ஆதரவை வழங்குவதற்காக தெலுங்கானா காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதே சமயம் ஆதரவு தேவைப்படுபவர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் சுமதி அவர்களை 7901643283 என்ற எண்ணில் அல்லது மின்னஞ்சல் மூலமாக உதவிக்கு தொடர்பு கொள்ளலாம். இதுவரை நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 500க்கும் மேற்பட்ட வீடுகள்,வாகனங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பிற சொத்துக்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.