
கஞ்சா வழக்கில் தலைமறைவாகி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சாமியாராக சுற்றித்திரிந்த நபரை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அன்னூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைதானார்.
அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் மணிகண்டன் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சாமியார் வேடத்தில் அங்கு வரும் மக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.