தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ராமநாதபுரத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. கபடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் கபடி விளையாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், “கபடி வீரர்களுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராமநாதபுரம் அதிகமான விளையாட்டு வீரர்களை கொண்ட மாவட்டம் .

அதிகப்படியான கபடி வீரர்களை உருவாக்கும் மாவட்டம். மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டம் தான் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்தில் தொடங்கிதான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அதேபோல இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்கி இருக்கிறேன் . மத்திய அரசு எப்படி தமிழ்நாட்டின் பெயரை தவிர்த்ததோ அதுபோல தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்