தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உட்பட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.