
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. குறிப்பாக தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ரேஷன் கார்டுகள் மிகவும் முக்கியம். இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது அவசியம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை கொடுக்கப்பட்ட நிலையில் பலர் இந்த செயல்பாட்டினை முடிக்காததால் கால அவகாசம் அக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டது. தற்போது 2 நாட்கள் மட்டுமே இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க கால அவகாசம் இருக்கிறது. இதனை ஆன்லைன் சென்டரில் சென்று எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இல்லையென https://tnpds.gov.in/என்ற இணையதள முகவரிக்குள் சென்றும் ஆட்சிக் கொள்ளலாம். மேலும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்காவிடில் அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்பதால் உடனடியாக பொதுமக்கள் இந்த செயல்பாட்டினை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.