
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் கார்டு அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. குறிப்பாக அனைத்து விதமான பணிகளுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அதனை அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் இன்னும் 4 நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் ஆதார் அட்டையை மை ஆதார் போர்ட்டலுக்குள் சென்று இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் அருகிலுள்ள தபால் நிலையங்கள் அல்லது ஆதார் மையத்திற்கும் சென்று ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டையை புதுப்பித்தால் அதற்கு 50 கட்டணமாக கொடுக்க வேண்டும். மேலும் இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் விரைந்து ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.