தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் மழை பெய்கிறது.

இதேப்போன்று  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.