
டெல்லி ரோகினி செக்டார் பகுதியில் ஓய்வு பெற்ற பொறியாளர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகள் சிங்கப்பூரில் வசிக்கிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் பொறியாளரை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர். பார்சலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் இருக்கிறது. டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம். 8 மணி நேரத்தில் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.
மேலும் விசாரணை முடியும் வரை உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை நம்பி ஏமார்ந்த பொறியாளர் அந்த நபர் கூறிய வங்கி கணக்கு 10 புள்ளி 30 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்து விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொறியாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.