
கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்