
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று காஞ்சிபுரம், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, திருவள்ளூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.