
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி படைத்த நிலையில் அதன் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் மீண்டும் புதிய வகை தொற்று உருவெடுத்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை முக கவசம் அணிய வேண்டும் என நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் குறைந்த அளவிலேயே இந்த வகை தொற்று பதிவாகி இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.