இந்திய வானிலை ஆய்வு மையம்  முக்கியமான செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் மேற்கு திசை காற்று வீசுவதால் ஒரு வாரத்துக்கு வெப்பநிலை தொடரும் என தெரிவித்துள்ளது.

தற்போது ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.