
இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் புகைப்படம் மூலம் சமூக வலைத்தளங்களில் பொய்யான ஐடி ஒன்றை உருவாக்கி அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. இது போன்ற நபர்களிடம் யூபி மற்றும் வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தி ஏமாந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சைபர் கிரைமில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.