
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சைபர் மோசடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஷம்பா ரக்ஷித் 3.55 கோடி ரூபாய் இழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியருக்கு போன் செய்த நபர் போலீஸ் என்று கூறிக்கொண்டு உங்களுடைய சிம் கார்டு மூலம் சட்டவிரோத செயல்கள் நடந்ததால் உங்களை கைது செய்ய போலீஸ் வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பிறகு திருப்பி தரப்படும் என்று சொன்னதை நம்பி அவரும் பெரும் தொகையை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற போன் கால்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.