தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய உள்ள நிலையில் அது தற்போது தமிழகத்தை நோக்கி நகர்கிறது. ஏற்கனவே இன்று காலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணி வரையில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.