ஓமிக்ரான் வைரஸ் மற்றும் கோவிட் நோய்களுக்கு எதிராக சக்திவாய்ந்த முறையில் போராடக்கூடிய எம்ஆர்என்ஏ பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தடுப்பூசியை வெளியிட்டார். பயோடெக்னாலஜி ரிசர்ச் கவுன்சிலுடன் (BIRAC) இணைந்து பயோடெக்னாலஜி துறையால் உருவாக்கப்பட்ட இந்த புதிய தடுப்பூசியான GEMCOVAC-OMக்கு DGCA ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி நேரடியாக உள்-தோலுக்கு செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.