
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் இதற்கிடையில் ஒரு சில பொய்யான தகவல்கள் மக்களிடையே பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஸ்மார்ட்போன் வாங்க மத்திய அரசு உதவும் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ‘இலவச ஸ்மார்ட்போன் திட்டம்-2023ன் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலும் இருவர் மொபைல் வாங்கலாம் என்றும், அரசு கணக்குகளில் ரூ. 10,200 தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த PIBFactCheck, இது போலியான வீடியோ என தெரிவித்துள்ளது. இப்படி ஏதும் திட்டம் இல்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.