
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இந்த நிலையில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே நாளை காலை முதல் மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தாம்பரம்-பிராட்வே இடையே 25 பேருந்துகள், கிளாம்பாக்கம்-பிராட்வே இடையே 20 பேருந்துகள், பல்லாவரம்- செங்கல்பட்டு இடையே 5 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.