
டெல்லியில் புதிதாக அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தை மக்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 28ம் தேதி கட்டடத்தை மோடி திறந்துவைத்தார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு முக்கோண வடிவில், நான்கு மாடிகள் உயரம் மற்றும் இந்தியாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது.
இந்நிலையில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த பார்லிமெண்டை பொதுமக்கள் இணையத்தில் முன் பதிவு செய்து பார்க்க ஏற்பாடு நடக்கிறது. கூட்டம் நடைபெறாத சனி, ஞாயிறுகளில் கலை 11 மணி முதல் மதியம் 3.30 வரை மக்கள் சுற்றிப்பார்க்க ஏற்பாடு நடக்கிறது.