
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறி ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ்குமாரை கோழை என கடுமையாக விமர்சித்தார்.
தற்போதுள்ள மத்திய அரசு ஒவ்வொரு தலைவர்களையும் அச்சுறுத்தி வருவதாக சாடிய கார்கே இதன் காரணமாகத்தான் சிலர் கூட்டணியை கைவிடுகிறார்கள். இது போன்ற கோழைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நாட்டில் ஜனநாயகம், அரசியலமைப்பு உயிர்ப்போடு இருக்குமா என வினாவினார்.
உண்மையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தல் தான் மக்கள் வாக்களிக்க கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கூறிய அவர் அதன் பிறகு வாக்களிப்பும் இருக்காது தேர்தலும் இருக்காது என எச்சரித்துள்ளார்.